உலகம்

இடைவிடாது கொட்டும் பனி! 1,400 விமானங்கள் ரத்து.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது.

இந்தநிலையில் நியூயார்க் நகரம் உள்பட அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை கெனன் என்கிற பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. 

அதன்படி அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடுமையான பனிப்புயல் வீசியது.

பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 1,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 647 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

 நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையம், ஜான் எப் கென்னடி விமான நிலையம் மற்றும் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தலா 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக அமெரிக்காவின் சில இடங்களில் 2 அடி உயரத்துக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது.

பல மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலக அளவில் கொரோனா பாதிப்பு 5.24 கோடியைத் தாண்டியது

farookshareek

அமெரிக்காவிடமும் விசாரணை நடத்துங்கள் – சீனா காட்டம்

farookshareek

லிதுவேனியாவிலிருந்து உற்பத்திப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்தியுள்ளது சீனா .

farookshareek

Leave a Comment