இலங்கை

விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் பலி.

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்வத்தை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, மீகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலமுல்ல – லெனகல வீதியின் நாவலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லெனகல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, திம்புலபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வர்நாத்தின் மேல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வெலிகேபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கபுகல ரஜவக வீதியில் டிப்பர் வாகனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலாங்கொடை, மகுனமலை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related posts

’பலவந்தமாக இடம்பெறும் காணி அளவீட்டை’ நிறுத்த வேண்டும்’

farookshareek

மஞ்சள் பயன்படுத்துவோருக்கு மீண்டும் எ ச்சரி க்கை : மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!!

farookshareek

வானிலை தொடர்பான அறிவிப்பு

farookshareek

Leave a Comment