சினிமா

தனுஷின் படங்களில் இருந்து வெளியேறி வரும் ஒளிப்பதிவாளர்கள் ! வாத்தி படத்திலுமா..

தனுஷ் நடிப்பில் இயக்குனர் Venky Atluri இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் வாத்தி, இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இதனிடையே இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த தினேஷ் கிருஷ்ணன் திடீரென வாத்தி படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தனுஷ் நடிக்கும் படத்தில் தன்னால் பணிபுரிய முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்று தினேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படமான நானே வருவேன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த யாமினி என்பவரும் வெளியேறினார்.

இந்த இருவரும் தவிர்க்க முடியாத காரணங்களாலே இப்படங்களில் இருந்து வெளியேறியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

ஹீரோயின் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா! மாஸ்டர் நடிகருக்கு ஜோடி.

farookshareek

பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரமாண்டமாக வெளியாகும் கமலின் விக்ரம் ! எப்போது ரிலீஸ் தெரியுமா?

farookshareek

விஜய்யில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறிய பிரபல நடிகை- அட இவங்களா, என்ன சீரியல் தெரியுமா?

farookshareek

Leave a Comment