உலகம்

வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொரி வெடித்துச் சிதறியது!! 17 பேர் பலி, 59 பேர் படுகாயம்.

கானா நாட்டில் வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 

இதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்தனர்.

கானா நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்திற்கு சுரங்க வேலைகளுக்காக வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி சாலையில் சென்றுகொண்டிருந்தது. 

அப்போது வேகமாக வந்த பைக் லாரி மீது மோதியுள்ளது.

 இந்த விபத்தில் லாரியில் தீப்பற்றியுள்ளது. இதனால், சரக்கு லாரியில் இருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது.

இந்த வெடிவிபத்தில் 17 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 59 பேர் படுகாயமடைந்தனர்.

 சக்திவாய்ந்த வெடிமருந்துகள் வெடித்ததில் அருகில் இருந்த பகுதிகள் அனைத்தும் தரைமட்டமாகின.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

பிரித்தானியா வர காத்திருக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

farookshareek

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை

farookshareek

6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா!

farookshareek

Leave a Comment