விளையாட்டு

லெஜன்ட்ஸ் லீக் போட்டித் தொடரில் முதல் வெற்றி இந்திய அணிக்கு…

லெஜன்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டித்தொடரில் நேற்று (20) இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆசிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆசிய அணி சார்பில் உபுல் தரங்க 46 பந்துகளில் 66 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

மிஸ்பா உல் ஹக் 44 ஒட்டங்களை எடுத்தார்.

இந்திய தரப்பில் கோனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இர்பான் பதான் 2 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி மற்றும் முனாப் படேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய யூசுப் பதான் 40 பந்துகளில் 80 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அவரது இன்னிங்ஸில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் களமிறங்கிய அவரது சகோதரர் இர்பான் பதான் 21 ஓட்டங்களை எடுத்தார்.

முகமது கைஃப் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் சொய்ப் அக்தர் மற்றும் உமர் குல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனிடையே நேற்றைய போட்டியில் பத்ரிநாத்தின் ரன் அவுட் ஆட்டமிழப்பு பலரால் கவனிக்கப்பட்டது.

களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனில் எறியப்பட்ட பந்து நேரடியாக விக்கெட்டில் பட்டதில் அவர் ஆட்டமிழந்து வௌியேறி இருந்தார்.

Related posts

திசை திருப்பிய விளையாட்டு…

farookshareek

சிலியை வென்றது உருகுவே

farookshareek

கபடி அணியினருக்கு புதிய மேலங்கிகள்

farookshareek

Leave a Comment