பாணந்துறையில் இரவு நேர பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பாடசாலையின் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று அதிகாலை 3.45 மணியளவில் அவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயரிழப்பதற்கு முன்னர் மனைவிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய நபர், தான் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு பிரிவின் பிரதானி சம்பளம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.