இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய் பீம்.
இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் மிக சிறந்த விமர்சங்களை பெற்று பெரியளவில் வரவேற்பை பெற்றது.
இதனிடையே தற்போது உலகளவில் பிரபலமான ஆஸ்கார் விருது பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
ஆம், 94-வது ஆஸ்கார் விருதிற்கு தகுதியுடைய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் ஜெய் பீம் மற்றும் அப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.