இலங்கை

மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி இயந்திரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தேசிய மின்கட்டமைப்புக்கு 150 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் இயந்திரம் ஒன்றே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (19) மின் உற்பத்தி இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் தடைப்பட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்று இரவு மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சையில் சந்தர்ப்பம்!

farookshareek

இரத்தக் கரையுடன் வீதியோரத்தில் இருந்து சடலம் மீட்பு

farookshareek

ஒரு வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்தவர் கைது

farookshareek

Leave a Comment