இலங்கை

நைஜீரிய பிரஜைகள் இருவர் கைது

செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் இருவர் மஹரகம நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (18) மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (19) கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

farookshareek

ஒரே நாளில் இருவேறு சந்தேகத்திற்கிடமான மரணங்கள்

farookshareek

4 வயது சிறுமியின் அசத்தல் சாதனை; ஆசியா சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவுசெய்தார்..!

farookshareek

Leave a Comment