இந்தியா

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு – பிஷப் விடுவிப்பு!

கேரளத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிஷப் பிரான்கோ முல்லக்கல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் கத்தோலிக்க பிஷப்பான பிரான்கோ முல்லக்கலின் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு கொச்சினில் கன்னியாஸ்திரி ஒருவர், தன்னை பிஷப் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தது கேரளத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின், அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது கோட்டயம் நீதிமன்றம் வலுவான சாட்சியங்கள் இல்லாததால் பிரான்கோ முல்லக்கலை வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், கேரளத்தை உலுக்கிய இந்த வழக்கில் பிரான்கோ விடுவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Related posts

மஹர பற்றி எரிகிறது: பதற்றம் அதிகரிப்பு

farookshareek

புதிய அணி அமைக்கும் தகுதி – கமல் விளக்கம்!​

farookshareek

இந்தியாவில் உருவாகும் கொரோனா தடுப்பூசி

farookshareek

Leave a Comment