இலங்கை

தற்போதைய ஆப்கானிஸ்தானின் நிலை தொடர்பில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார்.

தற்போதைய ஆப்கானிஸ்தானின் நிலை தொடர்பில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளார். இந்த தகவலை பிரதமர் தனது ருவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 முதல் 2014 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார். அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை வெளிவிவகார அமைச்சு தற்போது ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறது. விரைவில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிவிவகார அமைச்சரின் ஊடாக வெளியிடப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

copy.https://www.facebook.com/nirujan.selvanayagam?cft[0]=AZVzA0EYwqcybAgSqod2tBEGUzUSATVV-IJF3dfwe8iI028ES9eQlEApIwiZDMd97kASH-SwVoIesjZwdeuvyTVmCmcUwBZJdQ32rY7BA59Zb-1fUuWZITWt3cwfV-FgC-JUhy-p6rOUSG86TSoF0uXWFUxV2sAinALnxF94rjySZA&tn=-UC%2CP-R

Related posts

அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

farookshareek

சடலத்தை கொண்டுவர ஏற்பாடு

farookshareek

மேலும் 368 பேர் குணமடைந்தனர்

farookshareek

Leave a Comment