கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று (18) முதல், மேலும் 24 நகரங்களில் உள்ள கடைகளை மூடுவதற்கு வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் மட்டுமே திறந்திருக்கும் என்று வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 34 நகரங்களின் கடைகள் ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் மொத்தமாக 58 நகரங்களின் கடைகள் மூடப்பட்டுள்ளன.
அதன்படி, பிபில, மொனராகலை, மெதகம, சியம்பலாண்டுவ, புத்தல, எம்பிலிப்பிட்டிய, அயகம, கிரியெல்ல, பதுளை, இறக்குவாணை, கொடகவெல, நொச்சியாகம, கெப்பெட்டிபொல, ருவான்வெல்ல, திருகோணமலை, ஹாலி-எல, கணேமுல்ல, தம்பத்தேகம, கொட்டகலை, பதியபெல, கம்புறுபிட்டி, பதியதலாவ ஆகிய நகரங்களின் கடைகள் இன்று (18) முதல் மூடப்பட்டுள்ளன.