இலங்கை

அமைச்சரின் கூற்றை உண்மையாக்கிய அணில்

மின் தடை ஏன்? ஏற்படுகிறது என்பதற்கு வித்தியாசமான பதிலை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் அளித்திருந்தார்.

திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசு பதவியேற்று பத்து நாள்களில் மின்சார விநியோகத்தைச் சீரமைப்போம் என்று கூறினர்.

தற்போது பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால், தற்போது தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது துறையை முழுமையாக கவனிக்காததால் இந்தத் தடை ஏற்படுகிறது. அவர் தமிழகத்தில் மின்தடையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஏற்கெனவே இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அ.தி.மு.க) அரசு சரியாகப் பராமரிக்கவில்லை, அதனால் மின்தடை ஏற்படுகிறது என்று காரணம் கூறி, தவறான தகவலைத் தருகிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் மின் தடைக்கு காரணம் அணில் தான் என புதிய விளக்கத்தை அளித்துள்ளார் மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி. ‘’மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போல் நேரத்தில் தான் மின் தடை’’ என விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், கரூர் கோவை சாலையில் உள்ள கரூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் சுமார் 2 மணிநேரம் மின்சாரம் தடைப்பட்டது.

அதற்கான காரணத்தை மின் வாரிய அதிகாரிகள்,  மின்பாதையை நிறுத்திவிட்டு சோதனையிட்டனர். அதன்போதே, ​அந்த மின்தடைக்கு அணிலே காரணமென கண்டறிந்தனர். இறந்த அணிலை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் மின் இணைப்பை வழங்கினர். இதனூடாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கூற்றை அந்த அணில் உறுதிப்படுத்திவிட்டது.

Related posts

60 பவுண் நகைகளுடன் யாழ் வந்த சுவிஸ் தமிழ் குடும்பத்துக்கு நேர்ந்த கதி!

farookshareek

துமிந்தவின் விடுதலை தொடர்பில் 06 கேள்விகள்

farookshareek

இலஞ்சம் பெற்ற பாணந்துறை அதிபர் விளக்கமறியலில்..

farookshareek

Leave a Comment