இலங்கை

மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க குழு நியமனம்

மன்னார் மாவட்டத்தில், பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில், அதிகளவில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் முகதாக, இளைஞர் குழுவொன்றை அமைக்க தீர்மானிக்கட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக ஆராயும் அவசரக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில், நேற்று (22) நடைபெற்றது. இதன்போதே. இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது, மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்களிடமும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்கள் குறிப்பாக வெளி மாவட்டங்களில் ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றுகின்றவர்களிடமும் இருந்தே, அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கைகளுக்கான மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கான ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இளைஞர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அவர்களுக்கான பாதுகாப்பு உடைகளை வழங்கி, அவர்கள் மூலம், பயணக் கட்டுப்பாடு தளர்ரத்தப்படும் காலப்பகுதியில், அதிகளவில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்க்கபட்டது.

இதையடுத்து, குறித்த செயற்பாட்டை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருவது என தீர்மானிக்கப்பட்டதுடன், குறித்த செயற்பாட்டுக்கு விரும்பிய, கட்டுக்கோப்புடன் சுகாதார நடைமுறைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய இளைஞர், யுவதிகளை தன்னார்வத் தொண்டர்களாக இணைத்துக்கொள்ளவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

விஜய நியூஸ் பேப்பர்ஸ் வாசகர்களுக்கு

farookshareek

கொழும்பு – கண்டி ரயில் சேவையில் பாதிப்பு

farookshareek

ரிஷாட்டின் கோரிக்கை ஆணைக்குழுவால் நிராகரிப்பு

farookshareek

Leave a Comment