இலங்கை

நாட்டின் ஆட்சியில் இராணுவத்தினர் உள்நுழைந்து செயற்படுவது தவறு-ரணில்

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் இன்று முதல் நாளில் உரையாற்றும் போது இலங்கையின் கொவிட் தடுப்பு திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்இதில் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலானது இலங்கையிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் வகுத்த திட்டங்கள் யாவை? கொரோனா வைரஸ் பரவல் செயலணியை மட்டுமே உருவாக்கி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நினைத்தது. ஆனால் அந்த செயலணியின் செயற்பாடுகள் தோல்வியிலேயே முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் அமைச்சரவைக்கு அதிகாரத்தை வழங்கவில்லை எனவும் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.உலக சுகாதார அமைப்புடன் தொடர்புடைய எந்தவொரு குழுக்களும் இலங்கையில் இல்லை. அவ்வாறு இருக்கும் கொவிட் செயலணியின் தலைமைத்துவத்தை இராணுவ பிரதானியிடம் இந்த அரசு ஒப்படைத்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு படை பிரதானிக்கு கொவிட் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் எவ்வாறு சிறப்பாக செயற்பட முடியுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் அவையில் குறிப்பிட்டார்.அத்தோடு, அனைத்து ஜனநாயக நாடுகளில் மூவகையான அதிகாரப் பிரிவுகள் உள்ளன. அரசியல் அதிகாரம், சிவில் அதிகாரம் மற்றும் முப்படை அதிகாரம் இவற்றில் முப்படையினரின் அதிகாரமானது யுத்தத்திற்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும். ஆனால் இலங்கையில் அது தலைகீழாக மாறி நாட்டின் ஆட்சியில் முப்படையினர் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாகவும் ரணில் எம்.பி தெரிவித்தார்.இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமர் உரையாற்றி இருந்தார், இவருக்கு அடுத்ததாக நிதியமைச்சின் செயலாளரோ, நிதி இராஜாங்க அமைச்சரோ உரையாற்றி இருக்கலாம். ஆனால் இங்கு இராணுவத்தளபதி உரையாற்றுகிறார். இது என்னவென்று தனக்கு புரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.தனக்கு இராணுவத்தளபதியுடன் எந்தவொரு தனி குரோதங்களும் இல்லையெனவும் தனக்கு அவர் உதவியுள்ளதாகவும் குறிப்பிட்ட ரணில் எம்.பி, நாட்டின் ஆட்சியில் இராணுவத்தினர் உள்நுழைந்து செயற்படுவது தவறு என்பதையே சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியது, நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்வதற்காக அல்லவெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Related posts

உப பொலிஸ் பரிசோதகர் கைது

farookshareek

பாடசாலைகள் ஆரம்பிப்பதில் தாமதம்?

farookshareek

தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக அதிகரிப்பு

farookshareek

Leave a Comment