இலங்கை

விருந்துபசாரத்தில் பங்கேற்ற மேலும் 6 பேர் கைது

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கேற்ற மேலும் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் 15 ஆண்களும் 06 பெண்களுமாக  21 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குற்றத்திற்காக  இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

மதிலேறி தப்பிய மூவருள் ஒரு கைதி சிக்கினார்

farookshareek

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா.

farookshareek

திருகோணமலையில் 42 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

farookshareek

Leave a Comment