இலங்கை

மாட்டினார் மாலைத்தீவு பிரஜை

சமூகவலைத்தளத்தினூடாக பல்வேறு  பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி நபர்களை ஏமாற்றி, 5 இலட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்த மாலைத்தீவு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்திடிய பிரதேசத்தில் வைத்து, பெலியாகொட பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளதோடு, சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வங்கிகளின் கிரடிட் அட்டை, வங்கி அட்டை, ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், மடிக்கணினி, இரு கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரின் பேஸ்புக் நண்பர்களுக்கு போலியான தகவல்களைக் கூறி,’சில பரிசுப் பொருட்கள் கிடைத்திருப்பதாக’ அவர்களை நம்ப வைத்து பரிசுப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதற்காக பணம் செலுத்தப்பட வேண்டுமெனக் கூறி சந்தேகநபர் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தேகநபர் மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Related posts

குருநாகல் மேயர் உள்ளிட்ட ஐவர் வெளிநாடு செல்ல தடை

farookshareek

இன்றும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு

farookshareek

’சுகாதார சேவைகள் மத்தியஸ்தமாக இருக்கவேண்டும்’

farookshareek

Leave a Comment