இலங்கை

திருகோணமலையில் 42 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 42 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி காணப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தால் நேற்று (31) காலை வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே, இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 3,363 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை  1,922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மே மாதம் மாத்திரம் 78 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 84 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கந்தளாய் வைத்தியசாலையில் 69 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மாவட்டத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் கட்டில்கள் நிரம்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 232 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, இதில் திருகோணமலை மாவட்டத்தில் 116 பேர் கூடுதலான தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக அதிகரிப்பு

farookshareek

90ஆவது மரணம் பதிவானது

farookshareek

ஆயுதங்களுடன் 8 பேர் கைது

farookshareek

Leave a Comment