இலங்கை

சீனாவின் தடுப்பு மருந்தால் இலங்கைக்கு பாரிய நட்டம்

ஏனைய நாடுகளை விட அதிகளவான டொலர்களை செலுத்தி சீனாவிலிருந்து தடுப்பு மருந்து நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தைவிட அதிகளவான நட்டம் இதனால் நாட்டுக்கு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,  14 மில்லியன் சினாபோம் தடுப்பு மருந்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி ஒரு டோஸைப்  பெற்றுக்கொள்ள 15 அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகக்கூறி அதற்கான கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவையில் கோரியுள்ளார். ஆனால், பங்களாதேஷ் ஒரு டோஸை வெறும் 10 டொலர்களுக்குப் பெற்றுக்கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பங்களாதேஷைவிட இலங்கை ஒரு டோஸூக்கு 5 அமெரிக்க டொலர்களை மேலதிகமாக செலுத்துவதாகவும், 14 மில்லியன் தடுப்பு மருந்துகளுக்கு, மேலதிகமாக 70 மில்லியன்களை டொலர்களை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தைவிட, அதிகளவான நட்டம் இதனால் ஏற்படுவதாகவும் தெரிவித்த அவர், சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் ராஜபக்‌ஷ அரசாங்கம், தடுப்பு மருந்துகளுக்காக 70 மில்லியன் டொலர்களை மேலதிகமாகச் செலுத்துவதென்பது அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் அவர் இதன்போது கூறினார்.

நாட்டு மக்களின் 70 மில்லியன் டொலர்கள் சினாபோம் தடுப்பூசி  நாட்டுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்த மரிக்கார், இதில் ஏதோ டீல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் 8 ஆவது ஆண்டு சர்வதேச மாநாடு

farookshareek

மிகை வரி சட்ட மூலத்தில் ETF மற்றும் EPF நீக்கப்படும்

farookshareek

ரஞ்சனை பின்தள்ளிய பொன்சேகா

farookshareek

Leave a Comment