இலங்கை

கெப்டனிடம் 14 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கெப்டன், தலைமை பொறியிலாளர் மற்றும் பிரதி தலைமை பொறியியலாளர் ஆகிய மூவரிடம் வாக்குமூலம் நேற்று (31) பெற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கேப்டனிடம் 14 மணித்தியாலங்களுக்கு அதிக காலம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தலைமை பொறியிலாளரிடம் 13 மணித்தியாலங்களுக்கு அதிக காலம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிரதி தலைமை பொறியியலாளர் சுமார் 12 மணித்தியாலங்களுக்கு அதிக காலம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த வாக்குமூலங்களை சட்டமா அதிபரிடம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

1,363 கிலோ உலர்ந்த மஞ்சளுடன் மூவர் கைது

farookshareek

அனுமதி இன்றி திறந்த கடைக்கு உடன் பூட்டு

farookshareek

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது; பிரதமர் சிறப்புரை?

farookshareek

Leave a Comment