இலங்கை

கொழும்பில் இன்று எந்த காரணம் இன்றி போக்குவரத்து தடைகளை மீறி 3528 வாகனங்கள் கொழும்புக்குள்

கொழும்பில் இன்று எந்த காரணம் இன்றி போக்குவரத்து தடைகளை மீறி 3528 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.போக்குவரத்து தடைகளை மீறி கொழும்புக்குள் ஏராளமான வாகனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இன்று காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை 55,944 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அவர்கள் அத்தியாவசிய கடமை ஊழியர்கள் என்றே கூறியுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசிய கடமைக்கான அனுமதியைப் பயன்படுத்தி சட்ட மீறல் இடம்பெறுகிறதாக என கண்காணிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார். அத்துடன் 3528 வாகனங்கள் எந்த காரணமும் இல்லாமல் கொழும்புக்குள் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் காலை கொழும்புக்கு வெளியே பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

farookshareek

ரிஷாட் பதியுதீனிடம் 06 மணிநேரம் வாக்குமூலம்

farookshareek

பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல பெறுபேறு

farookshareek

Leave a Comment