உலகம்

அடுத்த பிரச்சினையா? – நாய்களிடம் இருந்து பரவும் கொரோனா

ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நாய்களிடையே பரவக்கூடிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் மலேசியாவில் உள்ள சராவக் பகுதியில், இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த கொரோனாவால் ஆபத்து இல்லை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் தொற்று நோய் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் கிரிகோரிகிரே தெரிவித்துள்ளதாவது

“மலேஷியாவில் நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது புதிதல்ல. நாய்கள் வாயிலாக கொரோனா வைரஸ் பரவும் சாத்தியங்கள் குறைவு, அப்படி தொற்று ஏற்பட்டாலும் மனிதர்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை’ என அவர் கூறியுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸால் 425 பேர் பலி

farookshareek

ஒரு மில்லியன் டொலர் ஓவியத்தை பாழாக்கிய பாதுகாவலருக்கு ஏற்பட்டுள்ள நிலை

farookshareek

வெளியேறத் தயாராகிறாரா டிரம்ப்?

farookshareek

Leave a Comment