கொரொனா அசாதாரண சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சமன் தர்சன பாண்டிகோராள சேர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாகவும் மூதூர் பிரதேச செயலாளர் திரு. எம்.பி.எம். முபாறக் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குறித்த உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.இன்றைய தினம் ஒவ்வொன்றும் 10,000.00ரூபா பெறுமதியான 62 உலர் உணவுப்பொதிகள் 62 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
