கிழக்கு மாகாணஆளுநரின் கொவிட்-19 செயலணியில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருவர் உள்ளடக்கம்.இலங்கை இராணுவப்படையில் சேவையாற்றும், ஏறாவூரை சேர்ந்த லெப்டினன்ட் கேணல் அனஸ் அஹ்மத் அவர்களும்,
நிந்தவூரை சேர்ந்த பஸித் குஸ்னி அவர்களும் கிழக்கு மாகாண ஆளுனரினதுகொரோனா ஒழிப்பு செயலணிக்குள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் ஏழு பேரைக் கொண்ட விசேட கொவிட் செயலணியொன்று மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டிருக்கிறது.கொவிட் இடர்நிலை தொடர்பில் பெதுமக்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலேயே இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.