இலங்கை

இருவரையும் விசாரிக்க ஒழுக்காற்று குழு நியமனம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்  சட்டமூலத்துக்கு ஆதரவாக  வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின்  சிரேஷ்ட பிரதித் தலைவரால், கட்சியின் யாப்புக்கு அமைவாக,  கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளன என அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். 

கட்சி  யாப்பின் பிரகாரம் அத்தகையதொரு தீர்மானம் இரண்டு (2) வாரத்துக்குள் கட்சியின் அரசியல் அதிகார பீடத்துக்கு  அறிவிக்கப்பட்டு அரசியல் அதிகார சபை அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கு அமைவாக கடந்த 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடிய கட்சியின் அரசியல் அதிகார பீடம்,  கட்சியின்   சிரேஷ்ட பிரதித் தலைவரினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டதற்கு ப்பூரண அங்கீகாரம் அளித்தது.

மேலும் அரசியல் அதிகார சபை மேற்சொன்ன இரண்டு அங்கத்தவர்கள் சம்பந்தமாக ஒழுங்காற்றுக் குழு ஒன்றை அமைத்தது.  இக்குழுவின் தலைவராக   சிரேஷ்ட சட்டத்தரணி, கட்சியின் சட்டம், மற்றும் யாப்பு சம்பந்தமான பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் அவர்கள் நியமிக்கப்பட்டனர்.

அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக அரசியல் அதிகார சபையின் அங்கத்தவரும் முன்னாள் ஈரான் நாட்டின் இலங்கை தூதுவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறையின்  சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி அனீஸ், அரசியல் அதிகார சபையின் அங்கத்தவரும் முன்னாள் அட்டாளச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான  சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக் குழு மிக விரைவில் மேற்சொன்ன இரண்டு அங்கத்தவர்களுக்குமான ஒழுங்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றது.

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும்   கட்சியின் யாப்பின் பிரகாரமே நடைபெற்றுள்ளன.  கட்சியின் யாப்பிற்கு அமைவாகவே கட்சி  பயணித்துக் கொண்டிருக்கின்றது. கட்சியின் போராளிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும்  ஒற்றுமையோடும், உறுதியோடுமே இருக்கின்றனர்.

Related posts

மத்திய அதிவேக வீதிக்கு பிரதமர் திடீர் விஜயம்

farookshareek

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் மேலும் தாமதம்.

farookshareek

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி பலி

farookshareek

Leave a Comment