இலங்கை

பல நிறுவனங்கள் அத்தியாவசிய சேவைகளாகின

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை​மையை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் பல அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமான அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன், நேற்று (27) வெளியிடப்பட்டது.

துறைமுகம், எரிபொருள், பொதுபோக்குவரத்து, மத்தியவங்கி, அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், சேவைகள் மற்றும் கிராம ​சேவகர்கள் உள்ளிட்ட பதவிநிலையிலிருக்கும் அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்டவையே அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆ​லோசனையின் பிரகாரமே இந்த வர்த்தமானி அறிவித்தல் ​வெளியிடப்பட்டுள்ளது,

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மக்களுக்கு ஆகக் கூடிய சேவைகளை வழங்கும் வகையிலேயே, மேலே குறிப்பிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி தங்களுக்கு கிடைக்கவில்லையென்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடளாவிய ரீதியிலுள்ள சகல கிராம சேவகர்களும், கடந்த 26ஆம் திகதி முதல் சட்டப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

farookshareek

4 கைதிகளின் முயற்சி தோல்வி

farookshareek

மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று

farookshareek

Leave a Comment