இலங்கை

76 ஆயிரம் வீடுகளில் மின்துண்டிப்பு; தொடரும் சாத்தியம்

நாட்டில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக சுமார் 76 ஆயிரம் வீடுகளில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, ஹொரணை, இங்கிரிய, பலாங்கொடை மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் இவ்வாறு மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் இன்று(26) கூறியுள்ளார்.

பல்வேறு பிரதேசங்களில் கடும் காற்று வீசி வருவதால் தொடர்ந்தும் மின்சார துண்டிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்துண்டிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு விசேட குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

farookshareek

இன்று பகல் முக்கிய தீர்மானம்

farookshareek

சுங்கப் பிரிவின் அதிகாரி போதைப்பொருளுடன் கைது

farookshareek

Leave a Comment