கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் முழங்காவில் கிராம அலுவலரான பி.நகுலேஸ்வரன் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 8.45 மணியளவில் யாழ் மன்னார் வீதியில் அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ்விபத்தானது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜெயபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
