வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில், நேற்று (25) இரவு, கும்பலொன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆச்சிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கத்திகளுடன் உட்புகுந்த இனந்தெரியாத குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலை மேற்கொணடுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
