இலங்கை

சிறைச்சாலைக்குள் பந்து வீசிய இருவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை விளக்கமறியல்  சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்களை வீசிய இருவரை, நாளை மறுதினம் (04) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் எம்.டி.லக்மால் ஜெயலத் உத்தரவிட்டார்.

திருகோணமலை, அக்போபுர  பகுதியைச் சேர்ந்த 22, 20 வயது இளைஞர்கள் இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும், தடைசெய்யப்பட்ட கேரளா கஞ்சா, ஹெரோய்ன் போதைப்பொருள், புகையிலை, பீடி, அலைபேசி, பற்றரி உள்ளிட்ட பொருள்களை சிறிய பந்து வடிவில் சீரமைத்து, திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் வீசியுள்ளனர்.

இதனையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்ட இவர்கள், திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில்,  திருகோணமலை துறைமுகப் பொலிஸார், சந்தேகநபர்களை திருகோணமலை பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்று (01) முன்னிலைப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு, பதில் நீதவான் உத்தரவிட்டார்.

Related posts

எரிபொருள் விநியோகம் வழமைக்கு?

farookshareek

மேலும் பலர் உயிரிழப்பு

farookshareek

17 வயது சிறுமி கர்ப்பம் – சிறிய தந்தை கைது

farookshareek

Leave a Comment