நாளை தொடக்கம் தமது சேவைகளிலிருந்து விலகிக்கொள்ள அகில இலங்கை மாகாணங்களுக்கிடையிலான பாடசாலை போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று தமது வாகனங்கள் பல பாடசாலை போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்ட நிலையில், நாளை தொடக்கம் அனைத்து சேவைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் நாளையிலிருந்து வாகனங்களை செலுத்துவதற்கான வழி இல்லை என்றும் இச்சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
எனவே பெற்றோரும் பிள்ளைகளும் பயமின்றி பாடசாலை சேவைகளைப் பயன்படுத்தினால் மாத்திரமே எம்மால் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலை கட்டமைப்பு செயற்பட்டால் மாத்திரமே எமக்கான வருமானம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.