உலகம்

உலகளவில் கொரோனா பாதிப்பு 5.79 கோடி – பலி 13.77 இலட்சம்

உலகளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.79 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 13.77 இலட்சத்தை தாண்டியுள்ளதாக ஜொன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் தற்போதைய (நவ. 21) நிலவரப்பபடி 57,909,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 40,108,259 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 1,377,745 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்தவர்களில் 16,423,987 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 102,269 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 12,274,726 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,698,120 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 22,789 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 260,283 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

5 வயது சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி – பிரித்தானியா அறிவிப்பு.

farookshareek

6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா!

farookshareek

தோ்தல் தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்ப்

farookshareek

Leave a Comment