இலங்கை

இரு கொத்தணிகளில் 16,000 தொற்றாளர்கள்

மினுவாங்கொட – பேலியகொட கொவிட்-19 கொத்தணியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 16,022ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 257 கொவிட்-19 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக இன்று மாலை அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முன்னர் அடையாளங்காணப்பட்ட மினுவாங்கொட-பேலியகொட கொத்தணியில் தொற்றுக்குள்ளானோரின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர்.

இந்நிலையில், தற்போது கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இலங்கையில் 19,537ஆக அதிகரித்துள்ளது. இதில், 13,590 நோயாளர்கள் முழுமையாக கொவிட்-19 இலிருந்து குணமடைந்ந்துள்ளதாகவும், இன்னும் 5,873 பேர் மருத்துவக் கண்காணிபில் உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை.

farookshareek

நாளைய மின்வெட்டு குறித்த அறிவிப்பு

farookshareek

உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பின் 8 ஆவது ஆண்டு சர்வதேச மாநாடு

farookshareek

Leave a Comment