கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.
அதேவேளை, மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கு, இன்று (08) கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதன் அடிப்படியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்வடைந்துள்ளது.
ஏறாவூரில் முதலாவதாகத் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரின் தாயாருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
பெலியகொட மீன் சந்தைக் தொத்தனியையடுத்து, கோரளைப்பறறு மத்தியில் 42 பேரும், செங்கலடியில் ஒருவரும், கிரானில் ஒருவரும், வெல்லாவெளியில் ஒருவரும், பட்டிருப்பில் ஒருவரும். களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், காத்தான்குடியில் ஒருவரும், ஏறாவூரில் 7 பேரும், செங்கலடியில் ஒருவரும், மட்டக்களப்பில் 5 பேருமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.