விளையாட்டு

எல்.பி.எல்: முதலாவது போட்டியில் கண்டி, கொழும்பு மோதல்

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரானது கொழும்பு, கண்டி அணிகள் மோதும் போட்டியுடன் ஹம்பந்தோட்டையில் இம்மாதம் 26ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள நிலையில் இம்மாதம் 26ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் காலியை யாழ்ப்பாணம் எதிர்கொள்ளவுள்ளதுடன் இப்போட்டி இரவு எட்டு மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

வழமையாக போட்டிகள் மாலை 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கவுள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட போட்டியும் அடுத்த மாதம் நான்காம் திகதி நடைபெறவுள்ள கொழும்பு, யாழ்ப்பாணத்துக்கிடையேயான போட்டியும் மாத்திரம் இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

Related posts

சுதந்திர கிண்ண வெற்றி டக்சன் பியூஸ்லஸுக்கு அர்ப்பணிப்பு

farookshareek

வெளியேற்றப்பட்டது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்

farookshareek

மும்பை – டெல்லி இன்று பலப்பரீட்சை!

farookshareek

Leave a Comment