இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வெளியேற்றப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபியில் நேற்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான வெளியேற்றப் போட்டியில் பெங்களூர் தோற்றமையைத் தொடர்ந்து அவ்வணி வெளியேற்றப்பட, இரண்டாவது தகுதிப் போட்டிக்கு ஹைதரபாத் தகுதிபெற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஹைதரபாத்
பெங்களூர்: 131/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏ.பி டி வில்லியர்ஸ் 56 (43), ஆரோன் பின்ஞ் 32 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேஸன் ஹோல்டர் 3/25 [4], தங்கராசு நடராஜன் 2/33 [4], ஷபாஸ் நதீம் 1/30 [4], சந்தீப் ஷர்மா 0/21 [4], ரஷீட் கான் 0/22 [4])
ஹைதரபாத்: 132/4 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் ஆ.இ 50 (44), ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 24 (20), மனிஷ் பாண்டே 24 (21), டேவிட் வோணர் 17 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 1/12 [4], யுஸ்வேந்திர சஹால் 1/24 [4], மொஹமட் சிராஜ் 2/28 [4])
போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்சன்