இலங்கை

கொரோனா வைரஸ், காற்று மாசு; முகக் கவசம் கட்டாயம்

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் அவதியுறும் இவ்வேளை,வளிமண்டலத்திலுள்ள காற்றும் மாசுபட்டுக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே,அவதானமாக இருக்குமாறு மக்கள் வேண்டப்படு கின்றனர்.

இலங்கையின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாகத் தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் (நோப்ரோ) காற்றுத் தரப் பிரிவு அறிவித்துள்ளது.

அதாவது,  இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மாசுபட்ட காற்று வீசுவதன் மூலம், இலங்கையின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளதாக (நோப்ரோ) காற்று தர பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை, பருவமழைக்கு இடையிலான மழை நிலையை கொண்டிருப்பதால், பல நாடுகளிலிருந்து வீசுகின்ற காற்று இலங்கைவருவதன் காரணமாக வளிமண்டலம்  மாசு படுகின்றதென காற்று தர பிரிவு கூறுகிறது.

காற்றின் தரக் குறியீடு தற்போது 90—150 வரம்புக்கு இடையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்கள் 2020 அக்டோபர் 27அம் திகதி  முதல் மோசமான காற்றின் தரத்தால் சூழப்பட்டுள்ளன.

இந்நிலை மேலும், சில நாள்களுக்கு நீடிக்கக் கூடுமென்ப தால்   சுவாச நோய் உள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான இந்தக்காலத்தில் சகல மக்களும் முகக் கவசங்களை மறக்காமல் அணியுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

Related posts

போதைப்பொருள்களுடன் மூவர் கைது

farookshareek

நேற்று 75 பேருக்கு மாத்திரமே ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்

farookshareek

எம்.பிகளுக்கு Ipad’

farookshareek

Leave a Comment