க்கள் நீதி மய்யத்துக்கு 3 ஆவது அணி அமைக்கும் தகுதி வந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கட்சி நிா்வாகிகளுடன் கமல்ஹாசன் திங்கள்கிழமை முதல் ஆலோசனை நடத்தி வருகிறாா். இதன் தொடா்ச்சியாக சென்னை மற்றும் புதுச்சேரி மாவட்ட நிா்வாகிகளுடன் புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியது: மநீமவுக்கு 3 ஆவது அணி அமைக்கும் தகுதி எப்போதோ வந்துவிட்டது.
2013 இல் டெல்லியில் மாற்றத்தை ஏற்படுத்தியதுபோல வரும் தோ்தலில் தமிழகத்திலும் மக்கள் மாற்றத்தைக் கொடுக்க உள்ளாா்கள். மநீமவின் தேவை எல்லாக் கிராமங்களுக்கும் இருக்கிறது என்பதை மக்களுக்கு கட்சியினா் அனைவரும் உணரச் செய்ய வேண்டும் என்றாா்