இலங்கை

கடலில் 2,000 கிலோகிராம் மஞ்சள் பறிமுதல்

தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்குப் படகில் கடத்த முயன்ற 2,000 கிலோகிராம் மஞ்சள் அடங்கிய 75 மூடைகளை, நடுக்கடலில் வைத்து இந்தியா – க்யூ பிரிவு பொலிஸார், இன்று (01) பறிமுதல் செய்தனர். 

கைப்பற்றப்பட்ட மஞ்சளின் இலங்கை மதிப்பு 65 இலட்சம் ரூபாய் என க்யூ பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டபம் வடக்கு, மீன்பிடித் துறைமுகம் அருகே உரிய பதிவு இலக்கம் இல்லாத  நாட்டுப்படகு ஒன்று நங்கூரமிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட  கியூ பிரிவு பொலிஸார், படகில் ஏறி சோதனை செய்தனர். 

அப்போது, படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக மஞ்சாள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமையும்  அந்நாட்டுப்படகு, தங்கச்சிமடத்தைச்  சேர்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.

இந்தப் நாட்டுப்படகு, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்குச் செல்வதற்காக மண்டபம்  வந்ததாகவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கு மீனவர்களைக் கடலுக்குள்  செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் மீனவர்கள் போர்வையில் கடத்தல்காரர்கள், நாட்டுக்குள் நுழைய முடியாததால், கடத்தி வந்த மஞ்சளை நாட்டுப்படகுடன் விட்டுச் சென்றுள்ளனர் என க்யூ பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். 

இதனுடன் தொடர்புடையவர்களைத் தேடி வருவதாகவும் அப்பகுதி மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில்  கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும்  இந்தியா – க்யூ பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

நாடாளுமன்றத்தில் ஆசனப் பிரச்சினை

farookshareek

60 மில்லியன் ரூபாய் மோசடி செய்த தம்பதி கைது

farookshareek

சட்டவிரோத வெடிமருந்துகள் மீட்பு; இருவர் கைது

farookshareek

Leave a Comment