விளையாட்டு

சிலியை வென்றது உருகுவே

தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், உருகுவேயில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் சிலியை 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது. உருகுவே சார்பாக, லூயிஸ் சுவாரஸ், மக்ஸிமிலியானோ கோமேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சிலி சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸிஸ் சந்தேஸ் பெற்றார். இதேவேளை, ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற போட்டியில் ஈக்குவடோரை லியனல் மெஸ்ஸி பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா வென்றது. இந்நிலையில், பராகுவேயில் நடைபெற்ற பராகுவே, பெருவுக்கிடையிலான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பராகுவே சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களை ஏஞ்செல் றொமாறோ பெற்றதோடு, பெரு சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அன்ட்ரே கரில்லோ பெற்றிருந்தார்.

Related posts

தேசங்களுக்கான லீக்: டென்மார்க்கிடம் தோற்றது இங்கிலாந்து

farookshareek

LPL போட்டிகள் ஒத்திவைப்பு

farookshareek

பஞ்சாப்பை வென்றது கொல்கத்தா

farookshareek

Leave a Comment