விளையாட்டு

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: அரையிறுதியில் ஜோக்கோவிச்

பிரான்ஸின் தலைநகர் பரிஸில் நடைபெறுகின்ற பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் முதல்நிலைவீரரான நொவக் ஜோக்கோவிச் தகுதிபெற்றுள்ளார். நேற்றிரவு நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் பப்லோ கரென்னோ புஸ்டாவை எதிர்கொண்ட சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 4-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றே அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்வை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். இந்நிலையில், தனது காலிறுதிப் போட்டியில் சக ஐக்கிய அமெரிக்க வீராங்கனையான டேனியலி றோஸ் கொலின்ஸை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனின், 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். இதேவேளை, தனது காலிறுதிப் போட்டியில் ஜேர்மனியின் லோரா சைகெமுண்டை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெற்ரா குவித்தோவா, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

Related posts

கபடி அணியினருக்கு புதிய மேலங்கிகள்

farookshareek

பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்

farookshareek

மும்பை – டெல்லி இன்று பலப்பரீட்சை!

farookshareek

Leave a Comment