பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான சோஃபியா கெனினும், போலந்தின் இகா ஸ்வியாடெக்கும் தகுதிபெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் பெற்றா குவித்தோவாவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் சோஃபியா கெனின், 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் நாடியா பொடொரொஸ்காவை எதிர்கொண்ட இகா ஸ்வியாடெக், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
previous post
next post