பிரான்ஸின் தலைநகர் பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்கத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியனான ரஃபேல் நடால் தகுதிபெற்றுள்ளார். இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜனிக் சின்னரை எதிர்கொண்ட உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 7-6 (7-4), 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மான்னை எதிர்ர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெம், 6-7 (1-7), 7-5, 7-6 (8-6), 6-7 (5-7), 2-6 என்ற செட் கணக்கில் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். இதேவேளை, உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தனது காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் நாடியா பொடொறொஸ்காவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்
previous post