பல்கலைக்கழகத்துக்கு இம்முறை தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை இரு வாரங்களுக்குள் அறிவிக்கவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கு முன்னர் பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுடன் அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இம்முறை சுமார் 40,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 10,000 மாணவர்கள் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.