2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஒக்டோபர் 5ஆம் திகதி முன்னிலையாகுமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (22) காலை, ஆணைக்குழுவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, அங்கு முன்னிலையாகியிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வழங்கிய சாட்சியத்தைப் பார்வையிட்டார்.
நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்த அவர், நண்பகல் 12 மணியளவில், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இதேவேளை, ஒக்டோபர் 6ஆம் திகதியன்று, ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.