கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மாதம் 05ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், 06ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது.