இலங்கை

மறுத்தார் மைத்திரி

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், தனக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கொரு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், சகலதையும் தெளிவுப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (20) அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை முற்றாக மறுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சமீர த சில்வாவின்  கையொப்பத்துடன் இவ்வறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் முன்னிலையில், தான் தொடர்பில், முன்வைத்த கருத்துகளை நிராகரித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கருத்துகள் பொய்யானவை, வெறுக்கத்தக்க அளவில் முன்வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.    

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராவதற்கான சந்தர்ப்பம், ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைக்குமாயின்,  சகல விடயங்களையும்  தெளிவுப்படுத்துவதற்கு தான் தயாராகவிருப்பதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

இரு கொத்தணிகளில் 16,000 தொற்றாளர்கள்

farookshareek

4 வயது சிறுமியின் அசத்தல் சாதனை; ஆசியா சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவுசெய்தார்..!

farookshareek

A/L பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்…

farookshareek

Leave a Comment