இலங்கை

எம்.பிகளுக்கு Ipad’

சபையின் நடவடிக்கைகள், ஒழுங்குப் புத்தகங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை துரிதமாக பெற்றுக்கொள்ளும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐபேட் (Ipad) பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமொன்று இருக்கிறதென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

தேவையான சகல ஆவணங்கள் மற்றும் தகவல்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், நிதி வீண்விரயத்தை தவிர்க்கும் வகையிலேயே இவ்வாறான ​திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது என்றார்.

நிதி மட்டுமன்றி, வீணாக செலவழிக்கப்படும் நேரம், சபைக்குள் எம்.பிக்களின் மேசைகளின் மீது பெரும் ​தொகையில், ஆவணங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றமை எல்லாமே இல்லாமற் செய்யப்படுமெனத் தெரிவித்த அவர், மேசைகளில் இருக்கும் ஆவணங்களால் உறுப்பினர்களுக்கு கடும் நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது என்றார்.

Ipad பெற்றுக்கொடுப்பதன் ஊடாக, மின்னஞ்சல் மற்றும் ஏனைய மென்பொருள்களின் ஊடாக, மிகவும் இலகுவான முறையில் அவர்களுக்கு வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

தீபாவளிக்கு வந்துள்ள அறிவிப்பு

farookshareek

குறைந்த விலையில் அரிசி!

farookshareek

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்…

farookshareek

Leave a Comment