பண்டாரகம-அட்டுளுகம பிரதேசத்தில், சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காகச் சென்றிருந்த பொலிஸார் மீது, தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த ஐவர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, கல்தொட்ட பொலிஸார் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், கல்தொட்ட பகுதியிலுள்ள காட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடையே, பெண் ஒருவரும் அடங்குவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.