வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் திருவிழாவை நடத்துவதற்கு பொலிஸாரால் கோரப்பட்ட தடை உத்தரவு விண்ணப்பத்தை, வவுனியா நீதவான் நீதிமன்றம், இன்று (16) நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் நாளையதினம் திருவிழா நடைபெறவிருந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக குற்றவியல் சட்டக்கோவையின் 106ஆவது பிரிவின் கீழ் தடைஉத்தரவு விண்ணப்பத்தை வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் தாக்கல் செய்தனர்.
இந்த விண்ணப்பத்தை இன்றையதினம் இதனை ஆராய்ந்த நீதவான், தடை உத்தரவு விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார்.